பிரித்தானியாவில் பள்ளிகளின் மதிப்பளிப்பும் மாணவர்களின் மதிப்பளிப்பும்

cups 2015

பிரித்தானியாவில் பள்ளிகளின் மதிப்பளிப்பும் மாணவர்களின் மதிப்பளிப்பும்

By: admin

25 January, 2019

, , ,

தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவை ஐக்கிய இராச்சியக்கிளை பள்ளிகளின் மதிப்பளிப்பும் அதிதிறன், தமிழ்த்திறன் மாணவர்களின் பரிசளிப்பும் மிகப்பிரமாண்டமான முறையில் இரண்டாவது ஆண்டாக 17.01.2016 காலை 10 மணியளவில் கரோ நகர பைரன் மண்டபத்தில் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவை அனைத்துலக மேலாளர் திருமதி நகுலேசுவரி அரியரத்தினம், ஆய்வாளர் திரு.சு.பற்றிமாகரன் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கியராச்சியக்கிளையின் பொறுப்பாளர் திரு முருகுப்பிள்ளை ஞானவேல் ஆகியோhரால் மங்கல விளக்கேற்றி தொடக்;கப்பட்டது. தொடர்ந்து தாயக மண்மீட்புப் போரில் தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிக்கொண்ட மாவீரர்களுக்கும் உயிர்நீத்த பொதுமக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து ஐக்கிய இராச்சியக்கிளையின் பொறுப்பாளர் திரு முருகுப்பிள்ளை ஞானவேல் அவர்களது வரவேற்புரையுடன் ஆய்வாளர் சு.பற்றிமாகரன் அவர்களின் ஆசிஉரையும்; தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவை அனைத்துலக மேலாளர் திருமதி நகுலேசுவரி அரியரத்தினம் அவர்களால் சிறப்புரையும் வழங்கப்பட்டது.

ஐக்கிய இராச்சியத்தில் தமிழர்கல்வி மேம்பாட்டுப்பேரவையின் வளர்ச்சிக்கு ஊன்று கோல்களாக உள்ள வளர்தமிழ்நூல்களின் வழி தடம்பதித்துக்கொண்டிருக்கும் நாற்பத்தி மூன்று பள்ளிகளுக்கு 5, 10, 15 ஆண்டு பணி அடிப்படையில் மதிப்பளிப்பு பட்டயங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் தமிழர்கல்வி மேம்பாட்டுப்பேரவையின் அனைத்துலக மேலாளர் திருமதி நகுலேசுவரி அரியரத்தினத்தினது பத்து ஆண்டுகளுக்கு மேலான தமிழ்க் கல்விப்பணிக்கான மதிப்பளிப்பு பட்டயமும் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் முதன்மை நிகழ்வாக சென்ற ஆண்டு (2015) அனைத்துலக கல்வி மேம்பாட்டுப்பேரவையால் நடாத்தப்பட்ட தமிழ்ப்பொதுத்தேர்வில் 359 அதிதிறன் பெற்ற (மதிப்பெண்கள் 90 இற்கு மேல்) மாணவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டன.

அத்துடன் தமிழர்; கல்விமேம்பாட்டுப்பேரவை ஐக்கியராச்சிய கிளையினால் நடாத்தப்பட்ட தமிழ்த்;திறன்போட்டிகளில் (திருக்குறள் கட்டுரை பேச்சு) முதல் மூன்று இடங்களைப் பெற்ற 72 மாணவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

விழாவில் ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற தமிழ்த்திறன் போட்டிகளின் பேச்சு, திருக்குறள் போட்டிகளில் முதலாமிடம் பெற்ற மாணவர்களது பேச்சும், திருக்குறளும் விழாவினை மேலும் மெருகூட்டியிருந்தது.

விழாவிற்கு தமிழர் கல்விமேம்பாட்டுப்பேரவை ஐக்கியராச்சியக் கிளையுடனுள்ள எண்பதிற்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 2500 க்கு மேற்பட்ட மக்கள் வருகை தந்து சிறப்பித்திருந்தனர. சீரற்ற காலநிலையினையும் பொருட்படுத்தாது ஸ்கொட்லாந்திலிலுள்ள பள்ளிகள் உட்பட பல வெளிமாவட்ட பள்ளிகளிலிருந்தும் பங்கேற்றிருந்தனர். விழா தமிழர் கல்விமேம்பாட்டுப்பேரவை ஐக்கிய இராச்சியக்கிளையின் செயலாளர் திருமதி உமா காந்தி அவர்களின் நன்றி உரையுடன் நிறைவு பெற்றது.

தமிழர்கல்வி மேம்பாட்டுப்பேரவையின் வளர்தமிழ் பாடத்திட்டத்தினை பதின்னான்கு நாடுகளில் அறுபதினாயிரத்திற்கும் மேலான மாணவச்செல்வங்கள் பின்பற்றி வருவதும், கடந்த ஆண்டும் இதே மண்டபத்தில் 400 அதிதிறன் மாணவர்களின்; பரிசளிப்பும் ஐக்கிய இராச்சியத்தில் பணிபுரியும் 250 தமிழ் ஆசிரியர்களுக்கு 5, 10, 15 ஆண்டு பணி அடிப்படையில் மதிப்பளிப்பு பட்டயங்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இவ் ஆண்டு விழாவினை மாணவர்களே தொகுத்து வழங்கியிருந்தமையுடன் இளையவர்களே முன்னின்று செவ்வனே விழாவினை ஒழுங்கமைத்திருந்தனர். இதனைப் பார்க்கும் போது “தமிழ் இனி மெல்லச் சாகும்” என்பதற்கு மாறாக தக்க வைப்பதற்கு வழியமைத்த ஆரோக்கியமான நிகழ்வாகக் காணப்பட்டது.